Thursday, October 03, 2013
இலங்கை::வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பிலும், முதலமைச்சரின் பதவி பிரமானம் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பு உறுதியான தீர்மானங்கள் இன்றி நிறைவடைந்தன.
இந்த நிலையில் நாளைய தினம் மீண்டும் இந்த சந்திப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய பேச்சுவார்த்தையின் போது, அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சு வாய்ப்புகளை வழங்க இணக்கம் காணப்பட்டது.
இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளில் இருந்தும் அமைச்சுப் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இந்த விண்ணப்பங்கள் நாளைய சந்திப்பின் போது சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவை குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் வடமாகாண அமைச்சரவையின் நியமனம் குறித்த தீர்மானத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று கொழும்பில் கூடியது.
இக்கூட்டத்தில் பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட போதும் இறுதி முடிகள் எதனையும் எடுக்கவில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எங்கே யாரின் முன்னால் மேற்கொள்வது என்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது..

No comments:
Post a Comment