Thursday, October 17, 2013

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிருத்திகள் பாராட்டத்தக்கவை: தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுன்க் சீ!

Thursday, October 17, 2013
இலங்கை::அண்மைக்காலங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிருத்திகள் பாராட்டத்தக்கவை என்று தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுன்க் சீ தெரிவித்துள்ளார்.
 
இணையதளம் தொடர்பா
ன சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் தென்கொரியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை சியோலில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
 
இலங்கையுடனான உறவை மேம்படுத்துவதுடன் வழங்கிவரும் உதவிகளை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கையின்  பொருளாதார அபிவிருத்திக்கான உதவிகளை அதிகரிப்பது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தினர்.

இச்சந்திப்பின் போது கொரிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனமான கொய்க்கா (koica) இலங்கையின் அடிப்படை கட்டுமான வசதிகள்- நகர அபிவிருத்தி குப்பைகளை அகற்றுதல் போன்றவற்றுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றமையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். அத்துடன் இலங்கையர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் அவர் நன்றி தெரிவித்தார்.
 
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்  14 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அந்நாட்டு ஜனாதிபதி பாக் கெவுன் ஹய்யையும் சந்தித்து கலந்துரையாடினர்.

No comments:

Post a Comment