Thursday, October 17, 2013

புலிகளின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையை கொள்வனவு செய்ய நிதியுதவி அளித்த கனேடிய பிரஜை: 7 வருடங்களின் பின்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்!!

Thursday, October 17, 2013
நியூயார்க்::புலிகளின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையை கொள்வனவு செய்ய நிதியுதவி அளித்த கனேடிய பிரஜையான வீர தீபன் நடராஜா, 7 வருடங்களின் பின்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவருக்கு, அடுத்த வருடம் ஜனவரி 31ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

இலங்கை ராணுவத்தினரின் கஃபீர் வானூர்திகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது,  புலிகள் இயக்கத்திற்காக 1 மில்லியன் டொலர் பெறுமதியான அதி சக்திவாய்ந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் அவரது சகாக்களும் முயன்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவருடன் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிறிதொரு கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா கடந்த ஜுலை மாதம் தன் மீதான குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டிருந்தார்.

பிரதீபன் நடராஜாவுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் கனேடிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அமெரிக்க பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment