Wednesday, October 23, 2013

ஐக்கிய இலங்கையை உருவாக்க இந்தியா எப்போதும் ஆர்வத்துடன் முன்னிற்கும்: இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா!

Wednesday, October 23, 2013
இலங்கை::ஐக்கிய இலங்கையை உருவாக்க இந்தியா எப்போதும் ஆர்வத்துடன் முன்னிற்கும். இலங்கை அரசியலில் ஏற்படும் நிரந்தர தன்மையானது தெற்காசிய அரசியலுக்கு பலத்தைச் சேர்க்கும் என்று இலங்கைக்கான இந்திய தூதுவர்  வை.கே.சின்ஹா தெரிவித்தார்.
நேற்று (22ஆம் திகதி) மாலை பிரதமர், பௌத்தசாசன அமைச்சர் தி.மு.ஜயரத்னவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே வை.கே. சின்ஹா இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வடக்கில் மாகாணச்சபை தேர்தல் நடத்தப்பட்டமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்- இலங்கை அரசுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலுப்படுத்தும். இலங்கை அரசுடன் அவர்கள் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தும் என்று கூறிய அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வட மாகாண முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் செய்தமையிட்டு தாம் உவகையடைவதாகவும் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர், இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் சுமார் 4000 ஆண்டுகளாக தொடர்புகள் காணப்படுகின்றன. இராமர் - இராவணன் கதை அதற்கொரு சிறந்த சான்று. இரு நாடுகளுக்கிடையில் சமய, கலாசார ரீதியான தொடர்புகளும் காணப்படுகின்றன.

தந்தை செல்வாவின் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஐம்பத்துக்கு ஐம்பது என்ற சட்டமூலத்தினால் வடக்கில் ஏற்பட்ட அமைதியின்மை இறுதியில் தீவிரவாதமாக மாறியது. தனிநாடு கேட்டு விடுதலைப் புலிகள் போராடினர். ஆனால் வடக்கு மக்களுக்கு தனிநாடு ஆசை இல்லை. ஒரு சிறு குழுவினரே அந்த ஆசையில் உள்ளனர்.

வடக்கு பிரச்சினைக்கு தீர்வை காணும் பொருட்டே ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழு உருவாக்கியுள்ளார். அதில் பங்களிப்பு செய்யாமல் வெளியிலிருந்து கருத்து தெரிவிப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. பாராளுமன்ற தெரிவுக்குவில் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்- என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது பிரதமரின் செயலாளர் அமரசேகர உட்பட பலர் கலந்துகொண்டனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment