Thursday, October 24, 2013

குற்றச்செயல்களுக்கு எதிராக இரு தரப்பு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது குறித்து ரஷ்ய மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்!

Thursday, October 24, 2013
இலங்கை::குற்றச்செயல்களுக்கு எதிராக இரு தரப்பு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது குறித்து ரஷ்ய மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில், அண்மையில் ரஷ்யாவில் முதல்சுற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றதாக சட்டமாஅதிபர் பாலித்த பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ரஷ்யாவின் சட்டத்துறைசார் சிரேஷ்ட அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ரஷ்யாவின் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதனைத்தவிர, ரஷ்யாவில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.


விரைவில் இதுதொடர்பான உடன்படிக்கையை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக சட்டமா அதிபர் பாலித்த பெர்னான்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment