Thursday, October 24, 2013
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான பிரிதொரு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தினங்களில் இவர்களுக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில், தீர்மானங்கள் எவையும் எட்டப்படாத நிலையில் இன்றைய தினம், மீண்டும் பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளது.
இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சினைகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்களின் இறுதி தீர்மானம் எதிர்வரும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையில் கடந்த தினங்களில் முக்கிய பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றதாகவும் எவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இவர்களுக்கு இடையிலான பேச்சு வாரத்தை முக்கிய தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது. அந்த கலந்துரையாடலின் போது சம்பிரதாய பூர்வமாகவும் கொள்கை ரீதியாகவும் மத்திய செயற்குழுவினால் பிரேரிக்கப்பட்ட திட்டங்களுக்கு இணக்கப்படும் அதேவேளை, ஒப்படைக்கப்படும் பொறுப்புகள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும். இதன் இறுதி தீர்மானங்கள் எட்டப்படுவதற்கே இரண்டு மூன்று தினங்கள் தேவை.

No comments:
Post a Comment