Monday, October, 07 ,2013
இலங்கை::இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் முற்பகல் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் வந்த அவரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தலைமையிலான அரச அதிகாரிகள் வரவேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்குவாநூர்தி ஒன்றில் அவர் கொழும்பை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள அவர் ஜனாதிபதி. எதிர்க்கட்சி தலைவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் உட்பட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார்
நாளை யாழ்ப்பாணத்துக்கு செல்லும் இந்திய அமைச்சர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் உட்பட்ட வடமாகாண சபையின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் முக்கிய கவனம் 13வது அரசியல் அமைப்பின் முழுமை அமுலாக்கம் தொடர்பிலேயே இருக்கும் என்று “த ஹிந்து” தெரிவித்துள்ளது
தமிழ்தேசியக்கூட்டமைப்பினரும் இந்த விடயத்தை அவரிடம் வலியுறுத்தவுள்ளதாக “த ஹிந்து” ;குறிப்பிட்டுள்ளது...

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ ஆகியோரையும் சல்மான் குர்ஷித் சந்திக்கவுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரு தரப்பு உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் மும்மொழி புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் திருகோணமலை சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கை ஆகியனவும் அடங்குவதாக அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருநாள் விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் வடபகுதிக்கு செல்லவுள்ளார்.
தெல்லிப்பளை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்திய வீடமைப்புத் திட்டத்தை அவர் பார்வையிடவுள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
வடமாகாண ஆளுநருடனும் சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment