Monday, October 7, 2013

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 46 பேர் பேருவளையில் கைது!

Monday, October, 07 ,2013
இலங்கை::சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 46 பேர் பேருவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் யாழ்ப்பாணம். வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
 
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்ல முயன்ற 46 பேர் இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த பேருவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பேருவளை நகர் சமநல விளையாட்டு மைதானத்திற்கு அருகில்இன்று (07.10.13) அதிகாலை 2.40 அளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
கைது செய்யப்பட்டவர்களில் 29 ஆண்கள், 07 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, வவுனியா, நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 
 
குறித்த நபர்கள் பயணித்த வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்டவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பேருவளை சமனல விளையாட்டரங்கு அருகே இன்று அதிகாலை 2.40 அளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment