Saturday, October 26, 2013

பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தல்!போகலாம் ஆனால் போகமாட்டோம்!!!

Saturday, October 26, 2013
இலங்கை::பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களிடையேயான கலந்துரையாடல் யாழ்.நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.13) மூன்று மணி நேரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் முதல் அமர்வு முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு அமைச்சின் கீழான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் பின்னர் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன், புளொட் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகமும் மாகாணசபை உறுப்பினருமான க.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வு மூன்று மணி நேரம் நீடித்தது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடக்கு மாகாண சபையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டது.

அத்துடன் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுப்பது தொடர்பாகவும், இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
 

இதன்போது அனைவரும் பொதுநலவாய மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கக் கூடாதென்றே வலியுறுத்தி உள்ளனர். எனினும் பங்குபற்றுவதனால் ஏற்படக் கூடிய அனுகூலங்கள் பற்றிய கொள்கை விளக்கத்தை சுமந்திரனும் பங்கு பற்றாமல் விடுவதனால் ஏற்படக்கூடிய கொள்கை விளக்கத்தை இரா சம்பந்தனும், இடையிட்டு முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தனது கருத்தினையும் விளக்கியதாக தெரியவருகிறது.
 
இந்த வகையில் நேற்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் பொதுநலவாய மகாநாடு குறித்த கலந்துரையாடலில் வடிவேலு பாணியில் போகலாம் ஆனால் போகமாட்டோம் என்ற வகையிலேயே அதி உயர் மூவர் தலமையின் (supreme leaders)  கருத்து அமைந்ததாக  தெரிய வருகிறது.

இதேவேளை இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் விடுவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதி உயர் மூவர் தலமையின் (supreme leaders)  மெல்லிதான கவலையை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தியா கலந்து கொள்ளாமல் விட்டால் 13ஆவது திருத்தத்தை இலங்கை ரத்துச் செய்தால் அதன் பின் கேட்பதற்கு யாரும் அற்றுப் போய்விடுவார்கள் என்றெல்லாம் அதி உயர் மூவர் தலமையின் (supreme leaders) புதிய வியாக்கியானங்களை கொண்டிருப்பதாக இவர்களுக்கு மிகவும் நெருக்கமான கொழும்பு தகவல் ஒன்று இன்று தெரிவித்தது.

No comments:

Post a Comment