Sunday, October 27, 2013
சென்னை::காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் முதலீடுகளை கொண்டு வர முடியும்: மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் நம்பிக்கை!
சென்னை::காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் முதலீடுகளை கொண்டு வர முடியும்: மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் நம்பிக்கை!
சென்னை::இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாநாட்டில் பங்கேற்றால் இந்தியாவுக்கு மட்டுமின்றி இலங்கைத் தமிழர்களுக்கும் நன்மை பயக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இந்நிலையில் சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய வணிகத்துறை இணை மந்திரி சுதர்சன நாச்சியப்பனிடம், காமன்வெல்த் மாநாடு தொடர்பாக நிருபர்கள் நேற்று கருத்து கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சுதர்சன நாச்சியப்பன், “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், மற்ற நாடுகளிடம் இருந்து முதலீடுகளை கொண்டு வர முடியும். காமன்வெல்த் மாநாட்டின் மூலம், மற்ற நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் நாம் முதலீட்டை கொண்டு வரவேண்டும்” என்றார்.
பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிலோ, வடக்கு மாகாணத்திலோ முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை. அந்த முதலீடுகளை கொண்டு வருவது பிரதமரின் பொறுப்பாக உள்ளது என்றும் சுதர்சன நாச்சியப்பன் குறிப்பிட்டார்.

இலங்கையில் கண்டிப்பாக காமன்வெல்த் மாநாடு நடைபெற வேண்டும் என்று
விரும்புகிறேன். இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவிக்கின்றனர். இந்தநிலையில் இந்த மாநாடு அங்கு நடைபெற்றால், அவர்களின் பொருளாதார நிலை உயரும்.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் பின்னடைந்திருக்கிறது. அதை முன்னுக்குகொண்டுவர வேண்டிய பொருப்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு நீண்ட பார்வையும் வேண்டும். அதே நேரத்திலே உணர்வுகளை, உணர்ச்சிகளை சமப்படுத்த வேண்டிய பொருப்பும் இருக்கிறது. தமிழினம் வாழவேண்டும்.
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் கரியவாசம் கூறியதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் அவருக்கு இல்லை என்று கூறினார்.

No comments:
Post a Comment