Sunday, October 27, 2013

இன அடிப்படையில் காவல்துறை சேவையை கூறு போட முடியாது_ காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன்!

Sunday, October 27, 2013
இலங்கை::இன அடிப்படையில் காவல்துறை சேவையை கூறு போட முடியாது என காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேற்று தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு ஏற்ற வகையில் வேறு வேறு காவல்துறை சேவைகளை அமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஒரே காவல்துறை சேவையே கடமையில் ஈடுபட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் ஒவ்வொரு காவல்துறை நிலையங்களிலும் 3-4 தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வரு
வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியமானது என்ற போதிலும், தனித் தனி காவல்துறை சேவைகளை அமைப்பது தீர்வாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்...
 
ஒவ்வொரு இனங்களின் அவசியத்திற்கும் ஏற்றாட்போல் இலங்கையினுள் பொலிஸாரை நியமிக்க முடியாது என பொலிஸ்மா அதிபர் இளங்ககோன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு பொலிஸ் துறையின் கீழ் அனைத்து பொலிஸாரும் செயற்படுவதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். 

விக்னேஸ்வரன் அவ்வாறு குறிப்பிடுவதற்கு முன்னதாகவே மொழிப் பிரச்சினை தொடர்பில் நாம் அறிந்து கொண்டு பொலிஸில் தமிழ் தெரிந்தவர்களை அதிகமாக இணைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இதன்படி பொலிஸ் திணைக்களத்தின் நடவடிக்கைகளை இலகுபடுத்திக் கொள்வதற்காக 2,000 வரையான தமிழ் தெரிந்த பொலிஸார் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் மேலும் தெரிவித்தார். 

தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்கள் வட மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment