Monday, October 28, 2013

வார இறுதியில் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தியா விஜயம்!

 Monday, October 28, 2013
இலங்கை::பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தியாவுக்கு இவ்வார இறுதியில் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக  ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 
இந்த விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான பல்வேறு விடயங்கள் குறித்து கோத்தபாய ராஜபக்ஷ இந்தியத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இந்திய மீனவர்கள் விவகாரங்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் நாராயண சுவாமி தெரிவித்துள்ளார்.
 
இருநாடுகளுக்கிடையிலான மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது ஆராயப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment