Monday, October 28, 2013

காதோடு காதாக...சுரேஸ் எம்.பி.!!

Monday, October 28, 2013
இலங்கை::பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவின் கருத்துக்கு சுரேஸ் எம்.பி. எதிர் அறிக்கை விட்டிருக்கிறார். உட்கட்சிப் பிரச்சினையால் வெளியே தலைகாட்ட முடியாமல் இருந்தவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது போன்று செயலாளர் எதையோ கூற இவர் எதையோ நினைத்து அறிக்கை விட்டிருக்கிறார்.

தம்பிக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று அரசியல் தீக்குளிக்க முயன்று தனது கட்சிக்கு வழங்கிய அமைச்சர் பதவியையும் பறிகொடுத்து பரிதவிக்கும் அவர் உண்மையான அரசியல் செய்பவராக இருந்தால் அண்ணன் ஐங்கரநேசன் பதவியேற்ற போது இவர் தனது கட்சி தலைமையிலிருந்து பதவி விலகியிருக்க வேண்டும்.

தனது விடயங்களை மறைக்க இப்போது பாதுகாப்புச் செயலாளரின் சரியான கருத்திற்கு பிழையான அர்த்தம் கற்பிக்க முனைகிறார். தமிழ்க் கூட்டமைப்பு இவரைத் தொடர்ந்தும் தனது பேச்சாளராக வைத்திருக்கத்தான் வேண்டுமா?

No comments:

Post a Comment