இலங்கை::றுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிக எண்ணிக்கையிலான அப் பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்கு பொறுப்புக்கூறுமாறு குற்றஞ்சாட்டி சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற் கான அழுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் இலங்கைக்கு எதிரான துர்ப்பிரசாரங்கள் சர்வதேச மட் டத்தில் அதிகரித்து வருகின்றன.
புலிகளின் பயங்கரவாத யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவ டைந்தவுடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சர்வதேச ரீதியில் பலநாடுகள் இலங்கைக்கு எதிராக சுமத்தின. அக்குற்றச்சாட்டுக ளுக்கு அரசாங்கம் ஆதாரபூர்வமான விளக்கங்களை கொடுத்த தையடுத்து சர்வதேச ரீதியில் இவ்வழுத்தங்கள் குறைந்திருந்தன. நவநீதம்பிள்ளை சில நாட்களுக்கு முன்னர் ஜெனீவா ஐக்கிய நாடு கள் பேரவையில் இலங்கை மீது புதிய குற்றச்சாட்டுகளை சுமத் தியதை அடுத்து, மீண்டும் சர்வதேச ரீதியில் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இவை குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவை மற்றும் மேற்கு நாடுகள் நியாயமற்ற முறையில் இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.
நடந்து முடிந்த விடயங்களை அநாவசியமாக மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்தி பிரச்சினைகளை உருவாக்குவதனால் இலங்கை யில் நிலவி வரும் தற்போதைய சமாதான சூழலும், நல்லிணக் கப்பாடும் சீர்குலைந்து போவதற்கும் அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போவதற்கும் வாய்ப்புகள் ஏற்படுவதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கலாகாது என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நியூயோர்க் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உபகுழு கூட்டத்தில் உரையாற்றும் போது வலியுறுத்தினார்.
மூன்று மாகாண சபைகளின் முதலமைச்சர்களை தெரிவு செய்யும் விடயம் எவ்வித சிக்கலுமின்றி சுமுகமாக முடிவடைந்துள்ளது. வடமாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கடந்த செவ்வாய்க்கிழமை நியமனக் கடிதத்தை கையளித்தார். இதேவேளையில் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிர மாணம் செய்து கொள்ள உள்ளார்கள். வடமேல் மாகாணத்தின் முதலமைச்சராக தயாசிறி ஜெயசேகரவும், மத்திய மாகாண முத லமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் சத்தியப்பிரமாணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாண சபையின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஜனா திபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்த போதிலும் அது தொடர்பாக இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் சிறுபான்மை மக்களின் மத சுதந்திரம் பறிக்கப்படவோ, அவர்கள் துன்புறுத்தப்படவோ இல்லை. இதுதான் உண்மை நிலை. எனினும் இலங்கைக்கு எதி ரான சில புலி ஆதரவு தேசத்துரோக சக்திகள் இலங்கை அரசாங்கம் மத ரீதி யிலும், இன ரீதியிலும் சிறுபான்மை மக்களை துன்புறுத்துகிறது என்ற ஆதாரமற்ற வதந்திகள் சர்வதேச ரீதியில் பரப்பப்படுகின்றன.
இத்தகைய பொய்யான தகவல்களை உண்மையான தகவல் கள் என்று நம்பி சில மேற்கத்திய நாடுகள் அநாவசியமாக கவலை கொண்டுள்ளன. உதாரணமாக நியூயோர்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 68ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய கனடிய வெளிநாட்டமைச்சர், ஜோன் பயாட், இலங்கையில் சிறுபான்மை இன மக்களின் மத சுதந்திரம் பறிக்கப்பட்டு வருவதாக கடும் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விதம் பொய்யான செய்திகளை சில அரசசார்பற்ற தேசத்து ரோக அமைப்புகளும் புலம் பெயர்ந்த புலி ஆதரவு தமிழர்களின் அமைப்புகளும் வேண்டுமென்றே இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்து வதற்கான போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவது குறிப் பிடத்தக்கது.
இராணுவத்தை வடபகுதியில் இருந்து வாபஸ் பெறவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப் படுகிறார்கள் என்பதை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக்காட்டுவ தற்கும் இத்தகைய புலி ஆதரவு தேசத்துரோக சக்திகள் இன்று முயற்சிகளை எடுத்து வருகின்றன. உண்மை என்றும் நிலைத்திருக்கும். ஆகவே, இத்தகைய போலிப்பிரசாரங்கள் காலப்போக்கில் எடுபடாமல் செயலிழந்துவிடும் என்பது திண்ணம். தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் வேண்டுமென்றே இனப் பூசல்களை நாட்டில் தோற்றுவிப்பதற்காக கடந்த புதன்கிழமை பல்வேறு சதித்திட்டங்களை மேடையேற்றிய போதிலும் அவை அனைத்தும் மக்களின் மதிநுட்பத்தினாலும் வலுப்பெற்றுள்ள நல்லிணக்கப்பாட்டின் மூலமும் முறியடிக்கப்பட்டது. ஆளை விட்டால் போதும் என்ற மனோநிலையில் இருக்கும் சிங்கள மககளின் உணர்வுகளை தூண்டிவிடுவதற்கு சில சிங்கள பெளத்த இனவாத இயக்கங்கள் இப்போது முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இவ்வியக்கங்கள் சிங்கள மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு எங்காவது ஓரிடத்தில் இனக்கலவரத்தை தூண்டி விட்டால் அதன் மூலம் தங்களுக்கு அரசியல் இலாபம் கிட்டு மென்ற நப்பாசையில் செயற்படுகின்றன.
இந்நாட்டின் பொதுமக்களில் பெரும்பாலானோர் சமாதானத்தையும், அமைதியான வாழ்க்கையையுமே விரும்புகிறார்கள். எனவே, அவர்களிடம் இத்தகைய இனவாத முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெற முடியாது.

No comments:
Post a Comment