Wednesday, October 16, 2013

சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தால் விரலை வெட்டுவோம்: நக்சல் மிரட்டல்!

Wednesday, October, 16, 2013
ராய்ப்பூர்:சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தால் அடையாள மை உள்ள விரலை வெட்டுவோம் என நக்சல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நக்சல் பிரச்னை உள்ள சட்டீஸ்கர் தவிர மற்ற மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் மட்டும் 2 கட்டமாகவும் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கரில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதியில் 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நவம்பர் 11ம்  தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தொகுதிகள் இந்த எச்சரிக்கையை மீறி வாக்களித்தால் மை வைக்கப்பட்ட விரலை துண்டிப்போம். உயிரையும் பறிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர். நக்சல் மிரட்டல் காரணமாக கடந்த தேர்தலின் போது இந்த மாவட்டங்களில் 39 சதவீத வாக்குகளே பதிவானது. மற்ற மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
 
நக்சல் பிரச்னை உள்ள மாவட்டங்களில் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே 27 ஆயிரம் மத்திய போலீசார் உள்ளனர். இவர்களுடன் மேலும் 40 ஆயிரம் துணை ராணுவத்தை இறக்க தேர்தல் ஆணையம் முடிவு
 
செய்துள்ளது. இந்நிலையில், பஸ்தர், பிஜப்பூர் மாவட்டங்களில் கிராமம் கிராமமாக சென்று தேர்தலில் வாக்களிக்க கூடாது என நக்சல்கள் துண்டு பிரசுரம் வினியோகித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment