Sunday, October 6, 2013

வட மாகாண சபைக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குமாறு இந்தியா எந்த சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வமாக கோரவில்லை: கருணாதிலக அமுனுகம!

Sunday, October 06, 2013
இலங்கை::வட மாகாண சபைக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குமாறு இந்தியா எந்த சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வமாக கோரவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்த பின்னரும், அவ்வாறான கோரிக்கையை இந்திய முன்வைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் எதிர்வரும் காலங்களில் காணி மற்றும் காவற்துறை அதிகாரம் சம்பந்தமான எந்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என்று அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment