Sunday, October 6, 2013

எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நேற்று மாத்தறையில் நடத்தப்பட்ட பேரணியின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைது!

Sunday, October 06, 2013
இலங்கை::எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நேற்று மாத்தறையில் நடத்தப்பட்ட பேரணியின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற் இந்த மோதலில் 8 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் மாத்தறை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை காயமடைந்த செயற்பாட்டாளர்களை சந்திப்பதற்கான இன்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கராப்பிட்டி வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

இதற்கிடையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் iது செய்யப்ப்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்திய மாகாண சபை உறுப்பினர் மைத்திரிகுணரத்னவின் தந்தை கைது செய்யப்பட்டு, காவற்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
 
ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தெவிநுவர விஸ்ணுகோவிலுக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்பினருக்கு இடையே இரண்டு இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.

தெவுன்தர மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றன.

இந்த மோதல் சம்பவங்களில் காயமடைந்த 8 பேர் மாத்தறை மற்றும் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெவுன்தர விஷ்ணு தேவாலயத்திற்கு அருகில் இன்று காலை ஆரம்பமான இந்த பாதையாத்திரையை தேசிய பௌர்னம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஆரம்பத்திலேயே அங்கு பிரசன்னமான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள், பாதையாத்திரைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

எதிர்ப்பு வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில் பாதையாத்திரை மாத்தறை நகர பக்கம் சென்ற நிலையில், மாத்தறை நகரத்தில் மத்தியில் அமைந்துள்ள போதிக்கு அருகில், பேரணிக்கு மேலும் பல  ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால் இடையூறு செய்யப்பட்டது.

இதன்போது மோதல் நிலை உருவான நிலையில், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பேரணியாக சென்ற வாகனங்களுக்கும் இதன்போது பாதிப்பு ஏற்பட்டது.

இந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக 5 பேர் காயமடைந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தென்மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஸ்பகுமார காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சபை உறுப்பினர் கிரிசாந்த புஸ்பகுமாரவின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கராப்பிட்டிய மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த மாகாண சபை

இதனிடையே, பேரணியின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், மாகாண சபை உறுப்பினர் மைத்ரி குணரத்னவின் தந்தை ஹேமன் குணரத்ன சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உறுப்பினர் கிரிசாந்த புஸ்பகுமார ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment