Monday, October 21, 2013
இலங்கை::நாட்டின் இறைமை ஒருமைப்பாட்டை பாதுகாத்து அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் ஜனநாயக பாரம்பரியங்களை பேணி பாதுகாக்கும் பொறுப்பு ஆயுதப் படையினருக்குண்டு. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாத சிந்தனைகள் முற்றாக ஒழியவில்லை என்பதால் தேசிய, பிராந்திய மட்டங்களில் எவர் அதிகாரத்தில் இருந்தாலும் தேசிய பாதுகாப்பு இறைமை ஒருமைப்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்க இராணுவம் பொறுப்புடன் செயற்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இராணுவப் பேச்சாளர் தெரிவித்த கருத் தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :- * உலகில் எந்த ஒரு நாட்டிலும் பிராந்திய நிர்வாக அமைப்புக்கு ஆயுதப் படைகளுக்கு ஆளணி சேர்த்தல் மற்றும் அப்படைகளை பயன்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
* பல நாடுகளின் பிராந்திய நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஆயுதப் படைகள் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக நிலைகொண்டிருக்கின்றன. * இலங்கையில் ஆயுதப் படைகளின் பிரதான தளபதி என்ற அடிப்படையில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் உத்தரவின் பேரிலேயே இராணுவம் செயற்படுகின்றது.
* ஆயுதப் படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தே தீர்மானத்தை எடுப்பார். அவ்விதம் முடிவெடுக்கும் போது பாதுகாப்பு செயலாளரும், தேசிய பாதுகாப்பு பேரவையும் எடுக்கும் தீர்மானங்களும் ஜனாதிபதி அவர்களினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* இந்த தேசிய பாதுகாப்பு பேரவையில் இராணுவம், விமானப் படை, கடற் படையினர் தளபதிகளும் அங்கம் வகிப்பர்.பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இராணுவத்தின் ஆளணி குறைப்பு படிப்படியாக இடம்பெறுகின்றது. வட பகுதியிலுள்ள படையினரை குறைப்பதும் இதில் ஓர் அம்சமாகும்.யாழ். குடாநாட்டில் யுத்த காலத்தில் 45,000 துருப்புக்கள் நிலைகொண்டிருந்தனர். இன்று அங்கு 15000 ற்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர்கள் என்ற அடிப்படையில் வட பகுதியில் இராணுவத்தினர் இருப்பதாக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் தவறானது.
எமது முப்படைகளின் உறுப்பினர்கள் அனைவரையும் கடமையில் ஈடுபடுத்தினாலும் இந்த விகிதாசாரம் படி நாம் அனைவரையும் சேவையில் ஈடுபடுத்த முடியாது. காணி விவகாரம் மக்களின் உணர் வுகளை பாதிக்கும் என்பதை இராணுவத்தினர் நன்கு உணர்ந்திருப்பதால் இது குறித்து இராணுவம் அவதானமாக இருக்கின்றது.தேசிய பாதுகாப்புக்கு அவசியமில்லை என்று கருதும் எந்த ஒரு காணியையும் நாம் தொடர்ந்தும் எமது பொறுப்பில் வைத்திருக்க மாட்டோம்.தாய் நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பணிக்குத் தேவையான அத்தியாவசிய காணிகளை மாத்திரமே நாம் வைத்திருப்போம்.
இராணுவம் நிலைகொண்டுள்ள பெரும் பகுதியான காணிகள் அரச காணிகளாகும். சிறிதளவு காணிகள் பொதுமக்களுக்கு சொந்தமானதாகும்.தனியார் காணி பாதுகாப்புக்கு அவசியமாக இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரம் அதற்கு போதியளவு நஷ்டஈட்டை கொடுத்து அவற்றை பொறுப்பேற்கின்றோம். யாழ். குடா நாட்டில் தனியார் காணி இராணுவ நடவடிக்கைகளுக்கு எடுக்கப்பட்டது தொடர்பில் விளக்கமளிப்பது அவசியம்.2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் யாழ். குடாநாட்டில் மாத்திரம் இராணுவம் 26,700 ஏக்கர் காணியை 9,400 வெவ்வேறு துண்டுகளாக மக்களுக்கு கொடுத்தது. இதில் மொத்தமாக 8050 வீடுகளும் அடங்கும். தற்போது யாழ். குடாநாட்டில் மொத்தமாக 7000 ஏக்கர் காணியையே இராணுவம் பயன்படுத்துகின்றது. இந்த காணிகளில் புலிகள் பயன்படுத்திய 1475 ஏக்கர் காணிகளும் அடங்குகின்றது.
நாம் அந்த காணிகளை பொறுப்பேற்று இராணுவ முகாம்களை அமைக்க பயன்படுத்தினோம்.யாழ். குடாநாட்டில் இராணுவம் பயன்படுத்தும் பெருமளவு காணி பலாலி இராணுவ முகாமை சூழ்ந்த பிரதேசத்தை அமைந்துள்ள. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் உட்பட 6000 ஏக்கர் இதில் அடங்குகிறது. பெண்கள் பாலியல் ரீதியில் இராணுவத்தினால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றார்கள் என்றும் வட பகுதியில் இதனால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றி குற்றச்சாட்டுக்களுக்கு தான் பின்னர் பல /q(தி நிலைமைகளை தெரிவுபடுத்த உள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். புலம் பெயர்ந்தவர்களின் போலி பிரசாரத்தை அடிப்படையாக வைத்து ஆயுதப் படைகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். பாலியல் ரீதியிலான குற்றச் செயல்களை மறைக்கும், மெளனம் சாதிக்கும் கலாசாரம் வட பகுதியில் இல்லை என்பதை இராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது.
பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் அல்லது பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது பாலியல் ரீதியில் துன்பப்படுத்தல் போன்ற பல தரப்பட்ட வன்முறைகள் பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் இருக்கிறது என்று கூறப்படுகின்ற போதிலும் அவற்றை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரும் அப் பிராந்தியத்தில் வாழ்கின்ற பெண்கள் பெண்பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையேற்பட காரணமென இராணுவத்தை தொடர்புபடுத்த தொடர்ந்தும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2007 ஜனவரி மாதம் முதல் 2012 மே மாதம் வரையும் வடக்கில் இடம்பெற்ற பாலியல் குற்றச் செயல்கள் குறித்து நாம் பரந்த அளவில் ஆய்வை நடத்தி பின்வரும் தகவல்களை திரட்டினோம். வட மாகாணத்தில் பாலியல் வன்முறை2007 ஜனவரி முதலாம் திகதி முதல் 2009 மே 18 ஆம் திகதி வரையில் இடம்பெற்ற சம்பவங்கள் 119 சந்தேக நபர்கள் 125.யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் :2009 மே 19 ஆம் திகதி முதல் 2012 மே 31 ஆம் திகதி வரை சம்பவங்கள் 256. சந்தேக நபர்கள் 307. 2007 ஜனவரி முதல் 2009 மே மாதம் வரை யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வடக்கிலிருந்து பாலியல் வன்முறை 7 பாதுகாப்பு படையினர் சம்பவங்களில் சம்பந்தப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.நாம் மேலே குறிப்பிட்ட 119 சம்பவங்களில் ஈடுபட்ட 125 பேரில் இந்த ஏழு படை வீரர்களும் அடங்குவர். இந்த பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களில் நால்வர் சிங்களவர். ஒருவர் தமிழர்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2009 மே முதல் 2012 மே வரையில் வட பகுதியில் பாலியல் வன்முறைகளில் ஆறு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டதாக அறிவிக்கப்படுகிறது. 256 சம்பவங்களில் கைதாகிய 307 பேர்களுள் ஆறு படையினரும் அடங்குவர்.இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் தமிழர் ஒருவர் முஸ்லிம். மூன்று சிங்களவர்கள் அடங்குவர்.2007 ஜனவரி முதல் 2012 மே மாதம் வரையில் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் இடம்பெற்ற 375 வன்முறை சம்பவங்களில் 11 சம்பவங்களில் மாத்திரமே பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது.எனவே இராணுவத்தினர் வட பகுதியில் நிலைகொண்டிருப்பதால் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தவறாகும். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு வெவ்வேறு வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்பட முடியும். இராஜதந்திர ரீதியில், உத்தியோக பற்றற்ற ரீதியில் மற்றும் இராணுவ ரீதியில் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் மூலம் நேரடி ஆயுத வன்முறையை நாம் ஒழித்து கட்டிவிட்டோம். ஆயினும் பிரிவினைவாத சித்தாந்தம் இன்றும் வட பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகும்.
இதேவேளையில் ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெறுவதை தவிர்த்துக் கொண்டு சமூகத்தில் இன்று இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் இன்னும் பிரிவினை வாத கொள்கையை மனதில் வைத்திருக்கலாம். வட பகுதியில் நாம் 95 வீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளோம். என்றாலும் நாம் அனைத்தையும் வெற்றிகரமாக சரியாக சொல்லக்கூடிய நிலையில் இல்லை.இந்த கண்ணிவெடிகள் எங்கு இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டவர்களும் சமூகத்தில் இருக்கலாம். நந்திக் கடல் களப்பிலிருந்து தப்பிச் செல்லும் போது சிலர் ஓர் இடத்தில் புதைத்தும் வைத்திருக்கலாம் இந்த அம்சத்தை நாம் கவனிக்காமல் விட்டுள்ளோம். எனவே இந்த ஆயுதங்களை பயன்படுத்தி சிலர் மீண்டும் பிரிவினை வாத போராட்டத்தில் இறங்குவதை தடுப்பதற்கு நாம் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு சிலரால் சில இளைஞர்கள் தவறான வழியில் இட்டுச் செல்வதை தடுப்பதற்கு இராணுவம் போதிய கண்காணிப்பை செலுத்தி வருகிறது.இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்கினால் அது நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.
வட மாகாண சபையின் புதிய நிர்வாகத்தை, ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் தங்கள் பிரச்சினைகளை சமாதான ரீதியில் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment