Friday, October 4, 2013

65 பேருடன் நடுக்கடலில் மூழ்கி கொண்டிருக்கும் படகு: இலங்கை கடற்படைக் கப்பல் சாகர விரைவு: மீட்புப் பணி துரிதம்!

Friday, October 04, 2013
இலங்கை::மாலைதீவு கடலில் 65 பேருடன் படகொன்று மூழ்குவதாகக் கிடைத்த தகவலொன்றையடுத்து இலங்கை கடற்படைக் கப்பலொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய நேற்று தெரிவித்தார்.
 
இலங்கையிலிருந்து சென்ற ‘தினுகே புத்தா’ என்னும் மீன்பிடி படகே 65 பேருடன் மாலைத்தீவு கடற்பரப்பில் மூழ்கும் அபாயத்திலிருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலறிந்து இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சாகர’ என்னும் கப்பலே மீட்பு பணிகளுக்காக இலங்கையிலிருந்து தென் மேற்காக 215 கிலோ மீற்றர் நோக்கிச் சென்றிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
 
அபாயத்தில் சிக்கியிருப்பது இலங்கைக்குச் சொந்தமான படகென உறுதிப்படுத்தப்பட்டு ள்ள போதிலும் அதில் பயணித்ததாக கூறப்படும் 65 பேர் தொடர்பில் எதனையும் திட்டவட்டமாக கூற முடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
 
மீட்கப்படும் படகு இரண்டு நாட்களில் கொழும்பு துறைமுகத்தை நோக்கி எடுத்து வரப்படும் எனக் கூறிய கமாண்டர், விசாரணைகளின் பின்னரே குறித்த படகு எங்கு தெற்காக பயணம் செய்தது மற்றும் அதில் பயணித்தவர்கள் யாரென்ற உண்மை தெரிய வருமெனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment