Friday, October 04, 2013
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய யுத்த சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து நாடளாவிய ரீதியில் கணிப்பீடு மேற்கொள்ள உள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்தது.
அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள இந்தக் கணிப்பீடு ஒரு மாத காலத்தினுள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குணவர்தன தெரிவித்தார்.
1982 ஆம் ஆண்டு முதல் 2012 வரையான காலப் பகுதிக்குட்பட்ட தகவல்கள் இதன்போது திரட்டப்பட உள்ளன.
யுத்த காலத்தில் இறந்தோர், காயமடைந்தோர், காணாமல் போனோர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் என்பன தொடர்பாக இந்த கணிப்பீட்டின்போது முழுமையான தகவல்கள் சேகரிக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
வீடு வீடாகச் சென்று இந்தக் கணக்கெடு ப்பு நடத்ததீர்மானிக்கப்பட்டுள்ளதோடு இதற்காக கிராம சேவகர்களின் ஒத்துழைப்பும் பெறப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் உதவியும் இதற்குப் பெறப்படும். இந்தக் கணிப்பீட்டை டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுக்க ஜனாதிபதி செயலாளரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை அதிகமான பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.

No comments:
Post a Comment