Friday, October 25, 2013
ஒஸ்லோ::ஒஸ்லோவில் இலங்கை குறித்து புலிகள் ஆதரவு சனல்- 4 ஊடகத்தின் காணொளி காட்சிப்படுத்தப்பட்ட போது சர்ச்சை!
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இலங்கை குறித்த புலிகள் ஆதரவு சனல்- 4 ஊடகத்தின் காணொளி கா
ட்சிப்படுத்தப்பட்ட போது சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
புலிகள் ஆதரவு சனல்-4 ஊடகவியலாளர் கலம் மக்ரேக்கு எதிராக சிலர் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கலம் மக்ரே, தமிழ் சிங்கள நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக இலங்கை தமிழ் மற்றும் சிங்களப் பெண்கள் இருவர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான காணொளிகள் சிங்களவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்காது என குறித்த தமிழ் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேபாளம், மலேசியா போன்ற நாடுகளில் குறித்த காணொளி ஒளிபரப்புச செய்யப்படுவதனை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, சில ஊடகங்கள் தொடர்ந்தும் புலிகளின் சார்பில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.



No comments:
Post a Comment