Friday, October 25, 2013
சென்னை::ம.தி.மு.க. மே 17 இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் சென்னை நுங்கம் பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. அதில் ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் ஜீவன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். தனி ஈழம் கோரிக்கை குறித்து இலங்கை தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர்க்குற்றம் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாஸ்திரி பவன் முன்பு கூடி இலங்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதன் மீது ஏறி தாண்டி குதித்து உள்ளே செல்ல முயன்றனர். ஒரு சிலர் சாலையில் நாலா புறமும் ஓடி சென்று உள்ளே செல்ல முயற்சி செய்தனர்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட புலிகளின் ஆதரவாளர்கள் 120 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர்.

No comments:
Post a Comment