Wednesday, October, 16, 2013
இலங்கை::அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், நாட்டை வந்தடைந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு நேற்று முன்தினம் திருப்பி அனுப்பப்பட்ட இந்தக் குழுவினர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சுமார் 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவர்களில் 12 பெண்களும், 08 குழந்தைகளும் அடங்குகின்றனர்.
இந்தக் குழுவினர் கடந்த மாதம் 7 ஆம் திகதி புல்மோட்டையில் இருந்து படகுமூலம் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு சட்டவிரோதமாக சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லமுயற்சித்த 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment