Thursday, September 05, 2013
நாகர்கோவில்::தே.மு.தி.க. மாநில துணை செயலாளராக இருந்தவர் ஆஸ்டின்.
நாகர்கோவிலை சேர்ந்த இவர் எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருந்தவர். விஜயகாந்த் தே.மு. தி.க.வை தொடங்கிய போது கட்சியில் சேர்ந்த இவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து ஆஸ்டின் கடந்த 23–ந் தேதி தே.மு.தி.க.வில் இருந்து விலகினார்.
ஆஸ்டினுக்கு ஆதரவாக குமரி மாவட்ட தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலரும் ராஜினாமா செய்தனர். அடுத்ததாக எந்த கட்சியில் சேரலாம் என்பது குறித்து ஆஸ்டின் தனது ஆதரவாளர்களுடன் நாகர்கோவிலில் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் நாளை கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
தே.மு.தி.க.வில் இருந்து நான் விலகியதை ஆதரித்து எனது ஆதரவாளர்களான 200 நிர்வாகிகளும் விலகி விட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் எனக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எனவே அவர்களுக்கு மதிப்பளித்து கடந்த 1–ந் தேதி நாகர்கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். இதில் பெரும்பாலானோர் தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்தனர். அதையேற்று தி.மு.க.வில் சேர முடிவு செய்தேன்.
நாளை(6–ந் தேதி) காலை 11 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளேன்.
இம்மாத இறுதியில் நாகர்கோவிலில் இணைப்பு விழா நடத்த உள்ளேன். அப்போது ஸ்டாலின் முன்னிலையில் எனது ஆதரவாளர்கள் அனைவரும் தி.மு.க.வில் இணைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment