Thursday, September 5, 2013

வடக்கில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நிறுத்துமாறு பிரித்தானியாவிடம், பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் (புலிகள் ஆதரவு கட்சி)என்ற அமைப்பு கோரியுள்ளளது!

Thursday, September 05, 2013
லண்டன்::வடக்கில்  தேர்தல் கண்காணிப்பாளர்களை நிறுத்துமாறு பிரித்தானியாவிடம், பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் (புலிகள் ஆதரவு கட்சி)என்ற அமைப்பு கோரியுள்ளளது.
 
எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிப்பதற்கு, பிரித்தானிய தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென கோரியுள்ளது.
 
சர்வதேச அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதாகத் தெரிவித்துள்ளது. வடக்கில் வாழ்ந்து வரும் (புலிகள் ஆதரவு)தமிழ் மக்களின் சுயாட்சி அதிகார விருப்பத்தை வெளிப்படுத்த இந்தத் தேர்தல் ஒர் சிறந்த வாய்ப்பாக அமையும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
(புலிகள் ஆதரவு)தமிழ் மக்களின் சுயாட்சி அதிகாரங்களுக்காக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல்களின் போது தெற்காசிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment