Sunday, September 22, 2013

வடக்கு மக்களின் அபிலாஷைகள் குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டும் - மைத்திரிபால சிறிசேன

Sunday, September 22, 2013
இலங்கை::வடக்கு மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகள், அரசாங்கம் நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட காண்பித்து வரும் முனைப்பை பறைசாற்றி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதனை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடைபெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிப்பதற்கு, அரசாங்கம் சகல வழிகளிலும் வழிவகை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளை மக்கள் நிராகரிப்பதுடன் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை; கொண்டுள்ளதனையே தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் குப்பை கூடைக்குள் தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment