Sunday, September 22, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் தயார்: பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ!

Sunday, September 22, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒர் பொறிமுறைமையை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்காது என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
மீண்டும் பிரிவினைவாதப் பாதையில் பயணிக்க கூட்டமைப்பு முயற்சி எடுக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கு இளைஞர்களின் நலனை தமிழ்த் தேசியக் கூட்டமைப் மேம்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment