Monday, September 23, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தல் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இலங்கையில் உள்ள இராஜதந்திரிகளுக்கும், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தனிகராலயங்களின் ஊடாகவும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலார் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக தேர்தல்கள் நடைபெற்றமை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணசபைத் தேர்தலை வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் இராஜதந்திரிகளும் கண்காணித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு தேர்தல் நடைபெற்ற காலத்தில் பிரித்தானிய, நோர்வே மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்கள் வடக்கு தேர்தல்களை கண்காணித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment