Wednesday, September 4, 2013

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையில் மஹிந்தோதய ஆய்வுக்கூடம்”புத்தளம் சாஹிராவுக்கு கிடைக்கப்பெற்றது!

Wednesday, September 04, 2013
இலங்கை::அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையில் உருவாகி, கல்வியமைச்சினால் செயட்படுத்தப்படுகின்ற ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்திற்குள் புத்தளம் சாஹிராக் கல்லூரி உள்வாங்கப்பட்டு முழுமையாக அனைத்து வளங்களையும் பெற்று முதற் தர பாடசாலையாக அபிவிருத்தியடைய இருக்கின்றது.
 
அதனடிப்படையில், ஆரம்ப அபிவிருத்தி நடவடிக்கையாக “மஹிந்தோதய ஆய்வுக்கூடம்” மற்றும் க.பொ.த உயர்தரத்திட்கான தொழில்நுட்பத் துறை என்பன நமது பாடசாலையை வந்தடைந்துள்ளன.
இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை உத்தியோகப் பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு (2013.09.03) காலை கால்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
சுமார் 1 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த ஆய்வுகூடத்துக்கான ஒதுக்கீட்டைப் பெற்றுத்தருவதற்கு நகர பிதா கே ஏ பாயிஸ் அவர்கள் பெரு முயற்சி எடுத்தமை குறிப்பிடத்தக்கது. 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தினுள் ஸாஹிரா கல்லூரியும் உள்வாங்கப்பட்டமையினாலேயே இது சாத்தியமாயிற்று.
 
புத்தளம் நகரில் ஸாஹிரா, பாத்திமா, என்பனவற்றுடன் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  போல்ஸ் வீதி ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி வளாகத்தில் மஹிந்தோதய ஆய்வுகூட கட்டிட நிர்மாணப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment