Saturday, September 28, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவு!

Saturday, September 28, 2013
ஜெனிவா::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தரவதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலேயே இவ் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தரவதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் அது தொடர்பில் இலங்கை அளித்த பதில்களை கவனத்தில் கொண்டு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, காணி பிரச்சினைகளை தீர்த்தல், கண்ணி வெடிகளை அகற்றுதல் உட்பட பல விடயங்களுக்குமாக இந்த நாடுகள் தமது பாராட்டத்தை தெரிவித்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எகிப்து, பிலிப்பைன்ஸ், குவைத் ஆகிய நாடுகள் மட்டுமின்றி பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா, பொலிவியா, வெனிசூலோ, பெலாரஸ் ஆகிய நாடுகள் இது தொடர்பில் பாராட்டியுள்ளதாக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.    

No comments:

Post a Comment