Saturday, September 28, 2013
அண்மையில் காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே உரியது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு இதனை உறுதி செய்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் அரசியல் அமைப்பு குறித்து போதிய விளக்கமற்ற இந்தியர்களினால் 13ம் திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காணி அதிகாரக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொலிஸ் அதிகார கோரிக்கைகளுக்கும் சட்ட ரீதியான பதிலளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை::இலங்கையின் அரசியல் அமைப்பை புறந்தள்ளி விட்டே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய - இலங்கை உடன்படிக்கையை செய்துள்ளார் என்பது கடந்த 26 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய இலங்கையின் எந்த நிலத்தையும் மாகாண சபைகள் கைப்பற்ற முடியாது. காணிகள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை உடன்படிக்கை இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உள்ளடக்கப்பட்ட பின்னர், காணி அதிகாரங்கள் முழுமையாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் வடக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரங்களை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்து வரும் அழுத்தங்கள் வெறும் புஷ்வாணம் போன்றது. இந்தியாவும் தற்போது தனது வலை மடக்கி கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் காவற்துறை அதிகாரங்களை கோரி கூட்டமைப்பு கொடுத்து வரும் அழுத்தங்களுக்கு எதிராகவும் தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் காவற்துறை என்ற சிறகை உடைக்க முயற்சித்து வருவதாகவும் கோமின் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்...
இந்திய இலங்கை உடன்படிக்கையில் சிக்கல்கள் காண்ப்படுகின்றது. நாட்டின் அரசியல் அமைப்பை கவனத்திற் கொள்ளாது உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,
அண்மையில் காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே உரியது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு இதனை உறுதி செய்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் அரசியல் அமைப்பு குறித்து போதிய விளக்கமற்ற இந்தியர்களினால் 13ம் திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காணி அதிகாரக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொலிஸ் அதிகார கோரிக்கைகளுக்கும் சட்ட ரீதியான பதிலளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment