Tuesday, September 03, 2013
சென்னை::இலங்கை கடற்படையால், கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம், காரைக்கால் மீனவர்கள், இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுதலை செய்யப்படுவர்,'' என, கடலூர் எம்.பி., கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை::இலங்கை கடற்படையால், கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம், காரைக்கால் மீனவர்கள், இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுதலை செய்யப்படுவர்,'' என, கடலூர் எம்.பி., கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அழகிரி எம்.பி., கூறியதாவது:
இலங்கையில் நடந்த, அந்நாட்டு பிரமுகர் சவுமிய தொண்டைமான் சிலை திறப்பு
விழாவுக்கு, நானும், புதுச்சேரி முன்னாள் அமைச்சர், கந்தசாமியும் கலந்து கொண்டோம்.
விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான், அமைச்சர் பசில்
ராஜபக்ஷே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது கிடைத்த சிறிய இடைவெளியில், நம்
நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து, ராஜபக்ஷேவிடம் விவாதித்தேன்.
இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையே, சமாதானம் ஏற்பட, இந்தியாவோ, தனி நபர்களோ
முயற்சி எடுத்தால், அதற்கு நான் துணை நிற்பேன்' என, ராஜபக்ஷே கூறினார். அதன் பின்,
பசில் ராஜபக்ஷேவிடம் விவாதித்தேன். அவர், நம் நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்
பிடிப்பதால், அந்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை, விவரித்தார்.
அதே
போல், முன்னர் கைது செய்த பின், இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டால், விடுதலை
செய்யும் நடைமுறையே இருந்தது. சமீப காலத்தில் தான், சட்ட நடவடிக்கை
எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். "எல்லை தாண்டி, மீன் பிடித்ததற்காக கைது
செய்யப்பட்ட, நாகப்பட்டினம், காரைக்கால் மீனவர்கள் இன்னும், ஒரு வாரத்தில் விடுதலை
செய்யப்படுவர்' என, தெரிவித்தார். மீனவர் பிரச்னை, இரண்டு நாட்டுக்குமான பிரச்னை
இல்லை; இரண்டு தரப்பு மீனவர்களுக்கு மட்டுமான பிரச்னை. இப்பிரச்னை, இலங்கையில்
மட்டுமல்ல; தமிழகத்திலும் உண்டு. தமிழக மீனவர்கள், 15 நாட்கள் இலங்கையிலும், இலங்கை
மீனவர்கள், 15 நாட்கள் தமிழகத்திலும் மீன் பிடிக்கும் வகையில், சமாதான ஒப்பந்தம்
ஏற்படுவதற்கான முயற்சியில், இறங்க உள்ளேன். இத்திட்டம் குறித்து, தமிழக
முதல்வரிடமும், பிரதமரிடமும் பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment