Sunday, September 29, 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது!

Sunday, September 29, 2013
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதன் போது வடமாகாண சபைக்கான அமைச்சர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடமாகாண சபைக்கான முதலமைச்சர் சத்திய பிரமாணம் மேற்கொள்ளும் நிகழ்வுகள் ஜனாதிபதி அழைக்கப்படுவார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தாக, ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு இரா.சம்பந்தனை தொடர்பு கொண்ட போது, இந்த விடயம் குறித்து தற்போது எதனையும் கூற முடியாது என்று சம்பந்தன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது குறித்தும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான போனஸ் ஆசனங்களுக்காக மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவ மாவட்டங்களின் பிரதிநிதிகளுக்கு சுழற்சி முறையில் ஒரு ஆசனமும் வழங்கப்படவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேல், ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படால், அவற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது சம்பந்தமாக எமது செய்திப்பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், பலனளிக்கவில்லை.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளரிடம்    இது குறித்து வினவிய போது, கலைக்கப்படாத மாகாண சபைகளில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் பதில் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment