Tuesday,September,03,2013
இலங்கை::இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்து பக்கசார்பானது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்
நவநீதம்பிள்ளையின் கருத்து, பிழையானது, நீதியற்றது, பக்கசார்பானது என்று ஜி எல் பீரிஷ் குறிப்பிட்டார்
அவரின் கருத்தில் சமநிலையின்மை காணப்பட்டது.
போரின் பின்னர் கம்போடியா, யூகோஸ்லேவியாவை போலல்லாமல் இலங்கையில் பாரிய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
வடக்கில் புனரமைப்புக்களுக்காக 3 பில்லியன் அமரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு புதிய தொழில்வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இலங்கை விஜயத்தின் போது நவநீதம்பி;ள்ளைக்கு எந்த இடத்திற்கும் சென்று எவரையும் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது
இதன் அடிப்படையில் அவர் வெளியிட்ட விடயங்கள், பக்கசார்ப்பானவை என்று ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்
இதன் அடிப்படையில் அவர் வெளியிட்ட விடயங்கள், பக்கசார்ப்பானவை என்று ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்
காணி தொடர்பான கருத்துக்களை இலங்கை சர்வதிகாரத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்து தொடர்பில் குறிப்பிட்ட ஜி எல் பீரிஸ், அதற்கான காரணங்களை கூறவில்லை.
நாட்டு மக்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளையா? நவநீதம்பிள்ளை சர்வதிகாரம் என்று கூறுகிறார் என ஜி எல் பீரிஸ் கேள்வி எழுப்பினார்
வெளியிட்ட நவநீதம்பிள்ளை, விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட காணிகள் மற்றும் காணி ஆவணங்கள் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.நாட்டு மக்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளையா? நவநீதம்பிள்ளை சர்வதிகாரம் என்று கூறுகிறார் என ஜி எல் பீரிஸ் கேள்வி எழுப்பினார்
அத்துடன் அரசாங்கத்தின் மீது நவநீதம்பிள்ளை சுமத்திய போர்க்குற்றச்சாட்டுக்களில் அடிப்படைகள் இல்லை என்றும் பீரிஸ் தெரிவித்தார்
புலிகளின் தலைவர் வேலுப்பி;ள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நவநீதம்பிள்ளை மலரஞ்சலி செலுத்த ஆயத்தமானபோதும் அதனை அரசாங்கம் அனுமதிக்கவில்லை
இந்த விடயத்தை நவநீதம்பிள்ளை, இலங்கை அரசாங்கத்துக்கு மறைக்க முற்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை நவநீதம்பிள்ளை, இலங்கை அரசாங்கத்துக்கு மறைக்க முற்பட்டுள்ளார்.
போரினால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் எனில் நவநீதம்பி;ள்ளை பொது இடம் ஒன்றில் அதனை செய்திருக்கலாம் என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டினார்

No comments:
Post a Comment