Wednesday, September 4, 2013

உலகத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஜனநாயக பாதுகாப்பும் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்!

Wednesday, September 04, 2013
இலங்கை::இலங்கை இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மூன்றாவது வருடாந்த கருத்தரங்கில் தலைமை உரையாற்றுவதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். 29 நாடுகளைச் சேர்ந்த பிரபலமான பிரதிநிதிகளும் இலங்கையைச் சேர்ந்தவர்களும் இக்கருத்தரங்கில் பங்குபற்றுகின்றனர். இந்த முக்கியமான தருனத்தில் அரசாங்கம் சார்பாக இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் நான் வரவேற்கின்றேன். இதேவேளை இராணுவத்தளபதிக்கும் இலங்கை இராணுவத்தின் அதிகாரிகளுக்கும் எனது வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
பாதுகாப்பு கருத்தரங்கானது 2011 ஆம் ஆண்டு ஆரம்பமானது. அதன் தொடராக இம்முறை மூன்றாவது ஆண்டாகவும் நடாத்தப்படுகின்றது. முதலாவது கருத்தரங்கில் மிகவும் கொடூர இயக்கமாக செயற்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தோற்கடிப்பதில் இலங்கை இராணுவத்தினரால் பெறப்பட்ட அநுபவங்கள் யுக்திகள் போன்றன பரிமாறப்பட்டன. அத்துடன் ஏனைய நாடுகளுக்கும் அவற்றை பிரயோகிப்பது தொடர்பில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்து.
 
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டாம் கருத்தரங்கில் யுத்தத்துக்குப் பின்னர் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதில் எடுக்கப்படும் முயற்சிகள் தொர்பாக கவனம் செலுத்தப்பட்டது. அதில் விசேடமாக யுத்தம் இடம் பெற்ற பிரதேசத்தில் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம், நல்லிணக்கம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களிலும் நாட்டின் அனைத்து பாகங்களிலும் நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகள் பற்றியும் ஆராயப்பட்டன.
 
யுத்தத்தின்பின்னரான இலங்கையின் சவால்களும் பிராந்திய ஸ்திரத்தன்மையும்’ என்ற தொனிப்பொருளில் இவ் வருடத்திற்கான பாதுகாப்புக் கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இப்போதைய நடைமுறை நிலைமைக்கேற்ற தொனிப்பொருளாகும்.
யுத்தம் முடிவுற்ற நான்கு வருட குறுகிய காலப்பகுதிக்குள் வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை எவ்வித பிரச்சினைகளுமின்றி முழுமையான ஜனநாயக சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
 
உலகத்தில் இன்று அமைதியும், ஸ்திரநிலையும் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். நான்கு வருடங்கள் என்ற குறுகிய கால எல்லைக்குள் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் செய்ய வேண்டி இருந்த சில கட்டாய நடவடிக்கைகளை குறிப்பிட்டாக வேண்டும்.
• இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 300000 உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் இருப்பிடத்தையும் சுமூக வாழ்வையும் உறுதி செய்தல்
• மிதிவெடி அகழ்வு மற்றும் நகரங்கள், கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள வசதிகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்தல்
• உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம்
• புலிகள் இயக்க முன்னாள் போராளின் புனர் வாழ்வு
• அவர்களை சமூகத்துடன் மீள் இணைத்தல்
ஒவ்வொருவரும் இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்கியவாறு உள்ளமையை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
 
ஏறத்தாழ 5,000 சதுர கிலோ மிற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணியும், உட்கட்டமைப்பு வசதிகளின் மீள் நிர்மானம்போன்றமை இன்றியமையாததாக இருந்ததுடன் அரசினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டு வசதிகள் உடனடியாகச் செய்து கொடுக்கப்படவேண்டிய சவாலாக இருந்தது. யுத்தம் முடிவுற்று ஐந்து மாதத்துக்கும் குறைவான காலத்துக்குள் மீள்குடியேற்றம் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது. ஏறத்தாழ யுத்தம் நிறைவு பெற்று மூன்று ஆண்டுகளில் உள்ளூரில் இடம்பெயர்ந்த அனைவரும் நலன்புரி முகாம்களில் குடியமர்த்தப்பட்டதுடன் புலிகயளின் செயற்பாட்டின் போது இடம்பெயர்ந்தோரும் தங்களது சொந்த இடங்களில் குடியமர்ந்தனர்.
 
இக்காலப்பகுதியில் மக்களது இயல்பு நிலை வாழ்க்கைக்காக பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் இம்மக்களுக்கு வாழ்வாதார உதவியாக மீன்பிடி உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், விதைகள் போன்ற இன்னோரன்ன உதவிகள் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தது.
 
நான்கு வருடங்கள் என்ற இக் குறுகிய கால பயணத்தில் இலங்கையானது பாரிய அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளதுடன், மக்கள் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் அனுபவித்துவருகின்றனர்.
எனது இவ் உரையை நிறைவுசெய்யும் முகமாக,பல நாடுகளில் இருந்தும் இங்கு வருகைதந்துள்ள அனைத்துப் பிரமுகர்களையும் வரவேற்பதுடன் இக் கருத்தரங்கானது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள அனுபவமாக அமையும் என்றும் உறுதியளிக்கின்றேன். அத்துடன் இலங்கையில் கழிக்கும் இத்தருனமானது உச்சபயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதிடன் இலங்கையானது பல வரலாற்றுச் சிறப்பு மிக்க அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் அவற்றை பார்வையிடும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுமாரும் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி.

No comments:

Post a Comment