Saturday, September 21, 2013

தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்த்தன!

Saturday, September 21, 2013
இலங்கை::தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்த்தன குறிப்பிட்டார்.

இதன்காரணமாக, தேர்தல் சட்டங்களை மீறும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், இதுவரையில் தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வாக்காளர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக புத்திக்க சிறிவர்த்தன குறிப்பிட்டார்.

 

No comments:

Post a Comment