Saturday, September 21, 2013
இலங்கை::சமாதானமும், பொருளாதார வளமுமா அல்லது மக்களிடையே ஒற்றுமையின்மையும் முரண்பாடுமா வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய வகையில் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல் இன்று 21ம் திகதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.
30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்தின் பின்னர் பல்லா யிரக்கணக்கானோரின் உயிர்த் தியாகத்தினால் வென்றெடுக் கப்பட்ட சுதந்திரத்தையும் இன ஒற்றுமையையும் பொருளாதார வளர்ச்சியையும் தொடர்ந்தும் மேற்கொள்வதா? அல்லது மீண்டும் வன்முறை மற்றும் மக்களிடையே ஒற்றுமை யின்மையும் சந்தேக உணர்வும் வலுப்பெறக்கூடிய கடந்த காலத்திற்கு நாட்டை இட்டுச் செல்வதா? என்பது குறித்து இந்தத் தேர்தலில் ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு இம்மூன்று மாகாணங்களின் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கையில் இருக்கிறது.
குறுகிய அரசியல் இலாபத்திற்காக ஒரு சாரார் இனவாதத்தையும், மதவாதத்தையும், பிரதேசவாதத்தையும் தூண்டிவிட்டு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் முறியடிப்பது அவசியமாகும்.
13 பிளஸ் இற்கு கூடுதலான சுயாதிபத்திய உரிமை வேண்டுமென்று கடந்த காலத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்பி வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு அந்த நிலையில் இருந்து இறங்கி வந்து வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்கு கொள்வது என்று எடுத்த தீர்மானம் அவர்களின் அடி மனதில் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்கான ஒரு நல்ல அறிகுறியாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையிலேயே இந்த நிலைப்பாட்டில் இருப்பது நல்லது. எது எவ்வாறிருப்பினும் இந்தத் தேர்தல் ஒரு பலத்த போட்டியாக இருந்தாலும் இறுதியில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் அமைப்பு வெற்றியீட்டியவுடன் மற்ற அணியினர் அதனுடன் இணைந்து தத்தமது மாகாணங்களில் ஒரு வலுவான ஆட்சியை அமைப்பதற்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
இம்மூன்று மாகாணங்களிலுமுள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது வைத்திருக்கும் அசையாத நம்பிக்கை இத்தேர்தல் தேசத்திற்கு நன்மை அளிக்கும் முடிவை பெற்றுக் கொடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அவர்கள் வடக்கு மாகாணத்தின் தேர்தல் மேடைகளில் சிங்களத்தில் பேசினாலும் அவ்வப்போது கொஞ்சு தமிழில் பேசி அந்த மக்களை மனமகிழ்ச்சியடையச் செய்து, வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். இவ்விதம் உள் ளொன்று வைத்து புறமொன்று பேசாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எங்களுக்கு என்றுமே அநீதி இழைக்க இடமளிக்கமாட்டார். அவரை நாம் பூரணமாக நம்பலாம் என்று நம்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பகிரங்கமாகவே ஜனாதிபதி அவர்களை பாராட்டுகிறார்கள்.
30 ஆண்டுகால யுத்தத்தின் போது எங்கள் கண்ணீர் துளிகளை துடைத்துவிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தவிர வேறு எந்த அரசியல் தலைவரும் முன்வரவில்லை. இந்தப் பெரியவரே, யுத்தத்தை மனிதாபிமான முறையில் நடத்தி, புலிகள் இயக்கத்தை துவம்சம் செய்து, இந்நாட்டில் உள்ள சகல இன மக்களுக்கும் நிரந்தரமான அமைதியையும், சமாதானத்தையும், விடுதலையையும் பெற்றுக் கொடுத்த வீரர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி அவர்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளை புனரமைப்பு செய்யும் அதேவேளையில் நாட்டில் புதியதோர் அபிவிருத்தி யுகத்தை தோற்றுவித்தார். இன்று நாட்டின் நாலா பக்கங்களிலும் நெடுஞ்சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், புதிய ஆஸ்பத்திரிகள், புதிய அரசாங்கக் கட்டிடங்கள், புதிய பாடசாலைக் கட்டிடங்கள் ஆகியன தோன்றியுள்ளன.
ஜனாதிபதி அவர்களின் நல்லாட்சி மீண்டும் பல்லாண்டு காலத்திற்கு இலங்கையில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென்று மக்கள் பிரார்த்திக்கிறார்கள். அதன் மூலமே பயங்கர வாதத்தினால் ஏற்பட்ட துன்ப வடுக்களை மக்கள் மறந்து, மீண்டும் புதுவாழ்வை ஆரம்பிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

No comments:
Post a Comment