Monday, September 23, 2013

இலங்கை உட்பட ஆறு நாடுகளின் ஒத்துழைப்புடனான இராணுவ பயிற்சி நடவடிக்கையொன்று மட்டக்களப்பில்!


Monday, September 23, 2013
இலங்கை::இலங்கை உட்பட ஆறு நாடுகளின் ஒத்துழைப்புடனான இராணுவ பயிற்சி நடவடிக்கையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
ஆறு நாடுகளின் 40 இராணுவ கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு வாகரை சல்லித்தீவு கடற்கரையில் நேற்று மாலையும், ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் இன்று காலையும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
தொப்பிகல, நரக்கமுல்ல, திருகோணமසலை, வாகரை மற்றும் கதிரவெளி அடங்கலாக கிழக்கு மாகாண இராணுவ தலையகத்தின் கீழுள்ள முப்படைகளைச் சேர்ந்த சுமார் 2,700 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, தரை, வான் மற்றும் கடல் மார்க்கங்களின் ஊடாக இராணுவ உபகரணங்களின் உதவியுடன் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment