Monday, September 23, 2013

கொழும்பில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் நூதனமான முறையில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை!

Monday, September 23, 2013
இலங்கை::திருச்சி:கொழும்பில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் நூதனமான முறையில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சிக்கு நேற்று மதியம் ஸ்ரீலங்கன் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய இமிகிரேஷன் போலீசார் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளில் 3 பேரின் மீது போலீசா ருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் தனித்தனியாக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் எவ்வித பொருளும் சிக்கவில்லை. ஆனாலும் போலீசாருக்கு  சந்தேகம் தீரவில்லை.

தொடர்ந்து நடந்த சோதனையில்  3 பேரும் தங்கத்தை உருக்கி கேப்சூலில் அடைத்து ஆசன வாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. மூவரும் தலா 600 கிராம் வீதம் மொத்தம் 1.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததுள்ளனர். இதன் மதிப்பு ரூ.54 லட்சம். அவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில்,  மூவரும் ராமநாதபுரம், எஸ்பி பட்டினத்தை சேர்ந்த ஜமீல்முகமது, முகமதுசம்சாத் அலி, ஜமீத்அலி என்பது தெரியவந்தது. வயிற்றுக்குள் வேறு எங்கேனும் தங்கம் மறைத்து வைத்துள்ளனரா என்பது குறித்து பரிசோதனை மூலம் கண்டறிய 3 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். அவர்களை இன்று டாக்டர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர். இவர்களிடம் தங்கத்தை கொடுத்து அனுப்பியது யார், இங்கு யாரிடம் கொடுக்க இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment