Monday, September 16, 2013

தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!!


Monday, September 16, 2013
இலங்கை::ஐயா,வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடப் போவதை உங்கள் வாயால் அறிவித்த வேளையிலேயே பிசங்கிப் போனீர்கள். அரசியலில் கால் வைக்கும் நோக்கம் இல்லை என்றும் ஏகோபித்த கோரிக்கையாக இருந்தால் பரிசீலிக்கலாம் என்றும் நீங்கள் கூறியதெல்லாம் வெறும் நடிப்பு என்பதை அந்த நேரத்தில் வெளிப்படுத்திவிட்டீர்கள்
(புலி)கூட்டமைப்புத் தலைவர்கள் ஏகமனதாக வேண்டுகோள் விடுத்தால் போட்டியிடுவதாகக் கூறிய நீங்கள் கூட்டமைப்பு வட்டாரங்களில் நிலவிய எதிர்ப்புக்கு மத்தியிலேயே போட்டிக்கு வந்தீர்கள்.
 
(புலி)கூட்டமைப்புத் தலைமை மட்டத்தில் உங்கள் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடனேயே நீங்கள் போட்டியிலிருந்து பின்வாங்கியிருப்பீர்கள் என்றே பெரும்பாலான தமிழ் மக்கள் நினைத்தார்கள். உச்ச நீதிமன்ற நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் நீங்கள் காட்டிய ஆன்மீகத் தோற்றமும் கனவான் வேஷமும் அவர்களை அப்படி நினைக்க வைத்தது. கூட்டமைப்புத் தலைமையில் ஏகமனதான முடிவொன்று செயற்கையாக ஏற்படுத்தப்படும் வரை காத்திருந்ததன் மூலம் உங்கள் கனவான் வேஷத்தைக் கலைத்துப் பதவி மோகத்தை வெளிப்படுத்தினீர்கள். நன்றாகப் பிசங்கிப் போனீர்கள்.
 
ஆரம்பத்தில் கூட்டமைப்புக்குள் நிலவிய எதிர்ப்பு இப்போதும் உங்களைக் கொஞ்சம் கிறுங்க வைப்பது தெரிகின்றது. அதனால்தான் ஒவ்வொருநாளும் பெரிதாகப் பத்திரிகை விளம்பரம் போட்டு ஆதரவு தேடுகின்றீர்கள். நீங்கள் கூறுவது போல நீங்கள் தான் தமிழ் மக்களின் ஏகமனதாக தெரிவு என்றால் ஏன் விக்னேஸ்வரன் அவர்களே இந்த விளம்பரம்?
 
முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் என்ற வகையில் தேர்தல் பிரசாரத்தின்போது என்ன கூறுகின்றீர்கள் என்பதை மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் வீரம் பற்றியும் பிரபாகரன் மாவீரன் என்றும் இன்றும் ஏதேதோவெல்லாம் பேசும் நீங்கள் இரண்டு வாக்குறுதிகளை மாத்திரம் தொடர்ச்சியாக அளித்து வருகின்றீர்கள். அதாவது நீங்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றால் என்ற செய்வீர்கள் என்ற கேள்விக்குப் பதிலாக இந்த இரண்டு வாக்குறுதிகளும் மாத்திரமே இருக்கின்றன. வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை அகற்றுவது ஒன்று வெளிநாடுகளிலிருந்து உதவி பெற்று அபிவிருத்தியை மேற்கொள்வது மற்றது.உங்கள் இரண்டு வாக்குறுதிகளுமே நடைமுறைப்படுத்த முடியாதவை.
 
இராணுவத்தை வடக்கிலிருந்து வாபஸ் பெறும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் மாத்திரமே இருக்கின்றன. வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை அகற்றுவது ஒன்றும் வெளிநாடுகளிலிருந்து உதவி பெற்று அபிவிருத்தியை மேற்கொள்வது மற்றது.
 
உங்கள் இரண்டு வாக்குறுதிகளுமே நடைமுறைப்படுத்த முடியாதவை. இராணுவத்தை வடக்கிலிருந்து வாபஸ் பெறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உண்டு. மாகாண முதலமைச்சரால் அதைச் செய்ய முடியாது. மத்திய அரசாங்கத்துக்கூடாகவே மாகாண சபைகள் வெளிநாட்டு உதவியைப் பெற முடியும். தன்னிச்சையாகப் பெற முடியாது. சட்டம் படித்து நீதி சேவையில் அதியுயர் பதவி வகித்த உங்களுக்கு இது தெரியாமலிருக்க முடியாது. தெரிந்திருந்தும் மக்களை ஏமாற்றுவதற்காகப் பொய் வாக்குறுதி அளிக்கின்றீர்கள். கூட்டமைப்பின் மற்றைய தலைவர்களுடைய பாணி உங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது.
 
தேர்தல் களத்துக்கு வந்தபோது அபிவிருத்திப் புரட்சி செய்யப்போவதாகச் சொல்லிக்கொண்டு வந்தீர்கள். இப்போது சொல்கின்றீர்கள் வெளிநாடுகளின் உதவிபெற்று அபிவிருத்தி செய்யப்போவதாக, மத்திய அரசாங்கத்துக்கூடாகவே வெளிநாட்டு உதவியைப் பெறமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கண்டபடி திட்டித்தீர்த்து எதிர்ப்பு அரசியல் செய்யும் உங்களால் அரசாங்கத்துக்கூடாக வெளிநாட்டு உதவி பெறுவது சாத்தியமில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.
 
எனவே உங்கள் அபிவிருத்திப் புரட்சியும் புஷ்வாணம். இராணுவத்தை வடக்கிலிருந்து அகற்றுவதும் நடக்காது.
இந்த லட்சணத்தில் நீங்கள் மாகாண சபையைக் கைப்பற்றினால் அந்த மாகாண சபையின் நிலை என்ன, செய்வதற்கு எதுவும் இல்லாததால் மாதாமாதம் கூடி வெற்றுப் பேச்சுக்களோடு கலைவது தானா? சும்மா கூடிக் கலைவதற்காக ஒரு மாகாணசபை உங்களுக்கு வேண்டுமா? மாகாண அரசியலை விடுவோம். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக உங்கள் கட்சி என்ன செய்கின்றது என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? உங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லித் தப்பிக்க முடியாது.
 
நீதவான் என்ற நிலையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதியரசர் என்ற நிலைக்கு வளர்ச்சியடையும் வரை தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியோ அரசியல் பற்றியோ எவ்வித அக்கறையும் இல்லாமல் இருந்தவர் என்பதால் உங்களுக்குத் தெரியாது தான். அதாவது தமிழ்த் தலைவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் பேசிப் பேசி எப்படித் தமிழ் மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் இப்போது நீங்களும் அதே குட்டையிலேயே ஊறுபவர் என்பதால் உங்கள் தலைவர்கள் செய்த பொல்லாப்புகளுக்கும் பொறுப்பேற்றுத்தான் தீர வேண்டும்.
 
எவ்வாறாயினும் கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் விஞ்ஞாபனத்திலிருந்து உங்களை நீங்கள் அந்நியப்படுத்த முடியாது. அந்த விஞ்ஞாபனத்தின் பொய்களுக்கும் போலிகளுக்கும் நீங்களும் சமஅளவில் பொறுப்பாளி. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன பெயரில் தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றும் முயற்சிக்கு நீங்களும் பங்காளிதான்.
 
வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி என்பது கேட்க நான்றாகத் தான் இருக்கின்றது. நல்ல தீர்வு தான். அது நடைமுறைக்கு வராமல் கடதாசி மட்டத்தில் இருப்பதால் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடையப் போவதில்லை. உங்கள் கட்சி முன்வைத்திருக்கும் சமஷடித் தீர்வு இன்றைய நிலையில் நடைமுறைப்படுத்த இயலாததென்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். தெரிந்து கொண்டு அவ்வாறான தீர்வை முன்வைத்திருப்பதை நரித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வை முன்வைத்து அதையே வலியுறுத்திக் கொண்டிருந்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வராது. இனப்பிரச்சினை நிரந்தரமான பிரச்சினையாக இருக்கும். அதேநேரம் மக்களால் விரும்புகின்ற சமஷடித் தீர்வை முன்வைத்தால் மக்களின் ஆதரவு குறையாமலிருக்கும். இனப்பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தலைமைக்கும் அச்சுறுத்தல் இல்லை. இப்படியாகச் செல்கின்றது உங்கள் கட்சியின் நரித்தந்திரச் சிந்தனை. இந்த விஞ்ஞாபனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நீங்களும் நிரந்தரத் தலைமைக்கு ஆசைப்படுகின்றீர்களா?
 
நீங்களும் உங்கள் கட்சித் தலைவர்களும் இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்க மக்கள் வேறு விதமாகச் சிந்திக்கத் தெடங்கிவிட்டார்கள். எந்தத் தீர்வு உடனடியாகக் கிடைக்க கூடியதாக உள்ளதோ அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டு கட்டங்கட்டமாக மேலதிக அதிகாரங்களைப் பெற்று இறுதித் தீர்வை அடைவதே சரியான அணுகுமுறை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். எல்லாக் காலமும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் தானே. தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.
 
இப்படிக்கு
சங்கர சிவன்

No comments:

Post a Comment