Monday, September 02, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்க சென்ற மக்களை காவற்துறையினர் தலையிட்டு தடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல்

நந்த மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே தாம் இந்த தகவலை அறிந்து கொண்டதாக யாழ் பிரதிக்காவற்துறை மா அதிபர் இந்து கருணாரட்ன கூறியுள்ளார்.
தான் அறிந்த வரை அப்படியான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு தடைகளை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் காவற்துறையினர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஆணையாளரின் பயணத்தின் போது போக்குவரத்து நிர்வாகத்தை மாத்திரமே காவற்துறையினர் செய்ததாக கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment