Friday, September 27, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது!

Friday, September 27, 2013
ஜெனிவா::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.
 
குற்றச் செயல் விசாரணை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு காத்திரமான வகையில் தீர்வு காணாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
 
நவனீதம்பிள்ளையின் மதிப்பீடுகள் கவனத்திற் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுs;shh.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.
 
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச் சாட்டுக்கள் குறித்து சர்வதேச தரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது..

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் நேற்றைய தினம் பேரவை அமர்வில் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதன்போது மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டு தரப்புகளாக பிரிந்து இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, நோர்வே, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன இலங்கை குறித்த நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வரவேற்றுள்ள நிலையில் நவநீதம் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளன.

எனினும் இதற்கு பதிலளித்திருந்த இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க சர்வதேச சமூகம் சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கும் என்று கூறுவதற்கான உரிமை நவநீதம்பிள்ளைக்கு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இடம்பெற்ற விவாதத்தின்போது இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உறுப்பு நாடுகளினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இடத்தில் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களாக பிரிந்து நின்றே கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment