Friday, September 20, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனந்தி எழிலன் சசிதரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவத்துடன் இராணுவ
ம் சம்பந்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறப்பானது என்றும் அவர் தெரிவித்தார்
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தனர் என்ற உண்மை தெரியவரும். இராணுவத்தினர் மீது குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு துரதிஷ்டவசமானது.
அதேநேரம் வடக்கில் உள்ள மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை இராணுவத்தினர் செய்து வருகின்றனர் என்றார்.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

No comments:
Post a Comment