Friday, September 20, 2013

இலங்­கைக்கு போதை­வஸ்து கொண்டுவரு­வதன் பின்­ன­ணியில் அரசியல் வாதி­களின் ஆதிக்கம் உள்­ளது. அவர்கள் யார் என்­பதை விரைவில் வெளி­யி­டு வோம்: பொதுபலசேனா!

Friday, September 20, 2013
இலங்கை::இலங்­கைக்கு போதை­வஸ்து கொண்டுவரு­வதன் பின்­ன­ணியில் அரசியல் வாதி­களின் ஆதிக்கம் உள்­ளது. அவர்கள் யார் என்­பதை விரைவில் வெளி­யி­டு வோம் என பொதுபலசேனாவின் பொதுச்செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
நாட்­டுக்குள் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத சக்­திகள் இர­க­சி­ய­ மாக இயங்கி வரு­வ­தா­கவும் தேரர் குற்றம் சாட்­டினார். இது தொடர்­பாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேலும் தெரி­விக்­கையில்,

நாட்­டிற்குள் தற்­போது போதை­வஸ்­துகள் சட்ட விரோ­த­மாக கொண்டுவரப்­ப­டு­வது அதி­க­ரித்­துள்ளது. சுங்க அதி­கா­ரிகள் மிக திற­மை­யுடன் செயற்­பட்டு சட்டவிரோத போதை வஸ்த்­து­களை கைப்­பற்­றி­யுள்­ளனர்.

பொது பல­சேனா அமைப்பு அந்த அதி­கா­ரி­களைச் சந்­தித்து போதை­வஸ்­துகள் கடத்தல் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தல்­களை வழங்­கி­யுள்­ள­தோடு ஊக்­கு­விப்­பு­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது.

அதி­கா­ரி­களின் சுயா­தீ­ன­மான விசா­ர­ணை­களை தடுப்­ப­தற்கு போதை­வஸ்து கடத்­தல்­களில் ஈடு­பட்­டுள்ள சில அர­சி­யல்­வா­திகள் தலை­யீ­டு­களை மேற்­கொ ண்டுள்­ளனர்.இவ் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்டாம் என அதி­கா­ரி­க­ளுக்கு நாம் அறி­வுரை வழங்­கி­யுள்ளோம்.

அதே­வேளை, போதை­வஸ்த்து கடத்­தல்­களின் ஈடு­படும் அர­சில்­வா­திகள் யார் என்­பதை மிக விரைவில் வெளி­யி­டுவோம்.

இத­னோடு இலங்­கையில் இர­க­சி­ய­மாக இயங்­கி­வரும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத சக்­தி­களும் இருக்­கின்­றன.

தீவி­ர­வாத சக்­தி­க­ளுக்கு இலங்கையில் வாழும் சம்­பி­ர­தா­ய­பூர்வ முஸ்லிம்கள் இரையாகின்றனர். போதைவஸ்த்து கடத்தலை தடுப்பதற்கும் அப்பாவனையை ஒழிப்பதற்கும் நாடு பூராகவும் எமது வலைப்பின்னல் செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றது என்றார்

No comments:

Post a Comment