Monday, September 23, 2013

வடமாகாணத்தை பொறுத்தவரையில் அங்குள்ள மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக் கொடுத்துள்ள அரசாங்கம்: அரசியல் கட்சிகளின் நிலைபாடுகள்!

Monday, September 23, 2013
இலங்கை::கடுமையான சூழ்நிலைக்கு மத்தியிலும் வடமாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்துள்ளமை, தங்கள் மீதான நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

 நேற்று பிற்பகல் 2 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை வடமாகாண சபையில் சுயாதீனமாக இயங்கவிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ராஜாப்தீன் இதனைத் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

வடமாகாணசபைக்கான தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களை வென்றுள்ள நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நிலையில் முஸ்ஸிம் காங்கிரஸ் வடமாகாண சபையில் தனித்து போட்டியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மக்கள் தொடர்ந்தும் விலை அதிகரிப்புகள் மற்றும் கட்டண அதிகரிப்புகளையும், பொருளாதார பின்னடைவுகளையும் விரும்புகின்றனரா? என்று ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் அதிகரித்துள்ளன.

எனினும் இது குறித்து திருப்தி அடைய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த முறை மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் அங்குள்ள மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக் கொடுத்துள்ள அரசாங்கம், மக்களின் தேர்தல் தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்வதற்காக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுயமாக வடமாகாணத்தை அபிவிருத்தி செய்துக் கொள்ள முடியுமாக இருந்தால், அதனை அவர்களிடமே விட்டுவிடுவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment