Wednesday, September 25, 2013
இலங்கை::நியூயோர்க்::ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
இலங்கை ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன, பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சு கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன், ஐ.நாவின் அரசியல் விவகார தலைவர் ஜெப்ரி பெல்ட்மன், மனிதஉரிமைகள் அதிகாரி ஐவன் சிமோனோவிக் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, ஐ.நா தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையில் போருக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும், ஐ.நாவுடனான இலங்கையின் ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், மாகாணசபைத் தேர்தலை நடத்தவும் இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகள் குறித்தும் ஐ.நா பொதுச்செயலர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு இன்னும் முழுமையான அணுகுமுறைகள் தேவை என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ...

அபிவிருத்தி அடையும் நாடுகளின் சர்வதேச தலையீடுகளானது வருந்தத்திற்குரிய விடயம்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ!
சில நாடுகள், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மனித உரிமை பொருப்பாளிகளாக தம்மை இனங்காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அபிவிருத்தி அடையும் நாடுகளின் சர்வதேச தலையீடுகளானது வருந்தத்திற்குரிய விடயம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 68வது பொதுச் சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

வளரும் நாடுகளின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் வெகுவாக அதிகரித்துள்ளமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய அக்கறை என்ற போர்வையிலேயே வளரும் நாடுகளின் உள் விவகாரங்களில் சர்வதேச தலையீடு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி இதனையிட்டு தான் கவலை கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நாடுகளின் கொள்கைகள் முழு உலகிற்கு தேவை இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதுமுள்ள ஏழை மக்களை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் போது, சர்வதேசத்தினரின் பலவீனம் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளுடனான இலங்கையின் உறவு தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment