Wednesday, September 25, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தல் வெற்றிகரமான முறையில் முடி வடைந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் நாட்டில் இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை ஏற்படுத்துவ தற்கான சாதகமான சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது.
நம்நாட்டு அரசியல்வாதிகள் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு ஒத்துழைப்பை முழுமையாக தராமல் இருப்பதற்கு காரணம், தங்கள் பிரதேசத்தில் தங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்க வேண்டுமென்பதேயாகும். மக்களின் ஆதரவை மாத்திரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் இந்நாட்டில் இனப்பிரச்சினை என் றுமே தீர்த்து வைக்கப்படாமல் போய்விடும்.
1956ம் ஆண்டில் பதவிக்கு வந்த பிரதம மந்திரி எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் கூடிப்பேசி இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கான பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கைச்சாத் திட்டார். இந்த சந்தர்ப்பத்தில் சிங்கள இனவாதிகள் குறுக்கீடு செய்து இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்துவிடுங்கள் என்று பிரதமமந்திரி எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கவை அச்சுறுத் தினார்கள்.
சிங்கள இனவாதிகளின் சொற்படி நடக்காவிட்டால் தனக்குள்ள மக்கள் ஆதரவு சீர்குலைந்துவிடும் என்று அஞ்சிய அன்றைய பிரதம மந்திரி அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். இதனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுத்த முதல் முயற்சி படுதோல்வியடைந்தது. அன்று பிரதம மந்திரி பண்டாரநாயக்க துணிச்சலாக அந்த ஒப்பந்தத்தை நடைமுறை ப்படுத்தியிருந்தால் நாட்டில் இனக்கலவரங்களோ, பயங்கர வாதமோ தோன்றியிருக்காது.
அடுத்தபடியாக 1965ம் ஆண்டு தேசிய அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக இருந்த டட்லி சேனநாயக்க அவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக டட்லி - செல்வா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார். அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால், முதலில் மாவட்ட சபைகளை உருவாக்கி படிப்படியாக மாகாணசபைகளை ஏற்படுத்தியிருக்க லாம். அதனையும் பேரினவாதிகள் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டால் தமிழர்களின் கை ஓங்கிவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால், தனக்கு தென்னிலங்கையில் உள்ள ஆதரவு பலவீனமடையும் என்று அஞ்சி பிரதம மந்திரி டட்லி சேனநாயக்க அந்த ஒப்பந்தத்தையும் கிழித்தெறிந்தார்.
இவ்விதம் அரசியல்வாதிகளின் நேர்மையின்மை, தங்களுக்கு இருக் கும் மக்கள் ஆதரவை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் போன்றவற்றினால் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு கட்சியோ அல்லது அரசியல் தலைவரோ திடகாத்திரத்துடன் முடிவெடுக்கத் தயங்கினார்கள். அதுதான் இன்று தமிழர் பிரச்சினை தீர்க்கப் படாதிருப்பதற்கான பிரதான காரணமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமாயின் முதலில் புலி பயங்கர வாதிகளை அடக்க வேண்டும். அதற்கு பின்னர் தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கையில் செயற்பட்டார். அதனால் இன்று புலி பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டது. அதற்கு அடுத்து ஜனாதிபதி அவர்கள் நாட்டில் அமைதியையும் சமாதா னத்தையும் ஏற்படுத்திய பின்னர் வட மாகாணசபைத் தேர்த லையும் வெற்றிகரமான முறையில் நடத்தியிருக்கிறார். இந்த வட மாகாணசபைத் தேர்தல் ஜனாதிபதி அவர்களுக்கும் நம்நாட்டின் ஜனநாயகத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
இந்நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் சுயநலத்தை மறந்து நாட்டில் உண்மையான அமைதியும், பொருளாதார அபிவிருத் தியும், சமானதாமும் ஏற்பட வேண்டுமானால், இனப்பிரச்சினைக்கு அனைவருக்கும் திருப்தியளிக்கக்கூடிய வகையிலான ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதன் மூலமே எங்கள் நாட்டில் ஒற்றையாட்சி அரசியல் தழைத்தோங்க முடியும்.
வடபகுதியில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி அவர்களை சந்தித்து பேசப் போவதாக வெளியிட்டுள்ள கருத்து சமாதானத்தின் மீது நம்பி க்கை கொண்ட இந்நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்க ப்படவேண்டிய கருத்தாகும். எதிர்ப்பு அரசியலின் மூலம் எத னையும் சாதிக்க முடியாது என்பதை வட மாகாண சபையில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொண்டு பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவது அவசி யமாகும்.
இப்படியான நல்லிணக்கப்பாடு இலங்கை அரசியலில் உருவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வடக்கில் தாங்கள் பெற்ற வெற்றியினால் பூரிப்படைந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் கலந்துகொண்டு, இனப்பிரச்சினைக்கு சுமுகத் தீர்வைக்காண முன்வருவார்கள் என்று அரசியல் அவதானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாத அரசியல்வாதிகள் அநாவசியமான பிரச்சினைகளை கிளப்பி, சமாதான முயற்சிகளை சீர்குலைக்க் கூடாது என்பதே எமது விருப்பமாகும்.

No comments:
Post a Comment