Tuesday, September 10, 2013

மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாப்பதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க!

Tuesday, September 10, 2013
இலங்கை::ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்தின் பின்னர், இலங்கை பக்கச்சார்பற்ற விடயங்களை எதிர்பார்ப்பதோடு, அவரின் நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
தமது விஜயத்தின் போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகத்தினர்,  பழிவாங்கப்படுதல், அச்சுறுத்தப்படல் மற்றும் தாக்குல்களுக்கு உள்ளாகுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நவனீதம் பிள்ளை வெளியிட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாப்பது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
 

No comments:

Post a Comment