Monday, September 23, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும்: ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் உதய கம்மன்பில!

Monday, September 23, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
வட மாகாணசபையில் ஈட்டிய வெற்றியை தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்க பயன்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை ரத்து செய்ய உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
 
வடக்கில் கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த வேறு எந்த கட்சியும் அரசியல் நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தம் காரணமாக வடக்கு மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் ஆற்றுப்படுத்தும் வரையில் ஆளும் கட்சியினால் வடக்கில் பெரும்பான்மை பலத்தைக் கைப்பற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தை தோற்கடிக்க ஸ்திரமான எந்தவொரு கட்சியும் கிடையாது என்பதனை வெளிக்காட்டி நிற்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment