Monday, September 23, 2013
மண்டபம்::இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று காலை மண்டபம் வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 34 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் கடந்த ஜூலை 5ம் தேதி காலை கடலுக்கு சென்றனர். கோடியக்கரை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். 34 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இரண்டு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களை பருத்தித்துறை கோர்ட் கடந்த 4ம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால், தங்களது படகுகளை ஒப்படைக்க வேண்டும் என கூறி, அவர்கள் தமிழகம் திரும்ப மறுத்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இந்திய தூதரக கட்டுப்பாட்டின் கீழ் கொழும்பு சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.இந்நிலையில், 34 பேரையும் தமிழகம் அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்தது. அதன்படி சர்வதேச கடல் எல்லையில் மீனவர்கள் 34 பேரையும் இலங்கை கடற்படையினர் நேற்று மதியம் 12 மணியளவில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். நேற்றிரவு 8.30 மணியளவில் பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கரை வந்து சேருவதில் சிரமம் ஏற்பட்டது.
சீற்றம் தணிந்ததையடுத்து இன்று காலை 6.30 மணியளவில் அவர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். கரை திரும்பிய மீனவர்களிடம் இந்திய கடலோர காவல்படை கமாண்டிங் அதிகாரி மோரே மற்றும் உளவு, க்யூ பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். இதையடுத்து 34 பேரும் தங்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மண்டபத்தில் காத்திருந்த உறவினர்கள், மீனவர்களை கண்ணீர் மல்க வரவேற்று கார், வேன்களில் அழைத்து சென்றனர்.
காரைக்கால் மீனவர் ஜெயபால் கூறுகையில், ‘‘எனது விசைப்படகில் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறை பிடித்தனர். எனது படகை இதர படகுகள் மீது மோத விட்டு சேதப்படுத்தினர். இதனால் அதிலிருந்த இன்ஜின் நீரில் மூழ்கி பழுதடைந்தது. யாழ்ப்பாணம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை பார்த்து கண்ணீர் வடித்த என்னை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். எனது படகை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

No comments:
Post a Comment